நாளை காலை வானில் செவ்வாய் – வியாழன் ( Mars-Jupiter) இணைவை அவதானிக்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி கிளார்க் ( Arthur C. Clarke) நிறுவனத்தின் வானியல் துறை தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய் மற்றும் வியாழன் மிக நெருக்கமாகத் தோன்றும், அவை அதிகாலையில் “இரட்டைக் கோள்” போல இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை அந்தந்த சுற்றுப்பாதையில் 350 மில்லியன் மைல்கள் (575 மில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும்.
எனினும், இரவு வானில் சந்திரன் இணைவது பொதுவானது என்றாலும், இரு கோள்களுக்கு இடையே இணைவது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இதுபோன்ற ஒரு அரிய இணைப்பு இன்று (14) இரவு 8.57 மணி முதல் இரவு 9.51 மணி வரை நிகழும் ஆனால் அந்த நேரத்தில், செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையிலான கோண தூரம் ஒரு டிகிரிக்கும் குறைவானது ஆகும்.
ஆனால் அந்த காலப்பகுதியில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் தொடுவானத்தில் இருந்து எழாததால் நாளை (15) அதிகாலை 2 மணிக்கு பின்னர் இலங்கையர்கள் இணைவதை அவதானிக்க முடியும்.
அந்த நேரத்தில், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே கோண வேறுபாடு 19′ 29” ஆக அதிகரிக்கும். இந்த நிகழ்வை தொலைநோக்கி மூலம் மக்கள் சிறப்பாகக் அவதானிக்க முடியும். இருப்பினும், செவ்வாய் மற்றும் வியாழன் இடையே இந்த வகையான இணைப்பு 2033 ஆம் ஆண்டில் மீளவும் நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.