வைரமுத்து, பாரதிராஜா சண்டை முற்றியது!!

459

Vairamuthu

தமிழ் திரையுலகில் தன் எழுத்துகளால் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் வைரமுத்து, அதேபோல் செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை கிராமங்களுக்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா.

சமீபத்தில் கவிஞர் வைரமுத்து மணிவிழாவை, கவிஞர்கள் திருநாள், கலை இலக்கியத் திருவிழாவாக, கோவையில், கடந்த 12, 13 தேதிகளில் கொண்டாடினர். அப்போது பாரதிராஜாவை பேச அழைத்தபோது, அவர் வழக்கம் போல் வாய்க்கு வந்தது எல்லாம் பேச, வைரமுத்து கோபமாகிவிட்டாராம்.

பின் வைரமுத்து பேசிய போது பாரதிராஜாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேச, உடனே பாரதிராஜா மைக் அருகில் வந்து உனக்கு வித்தை தெரியும். எனக்கு உன் அளவுக்குத் தெரியாது. நான், ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்துதான் பேசினேன், தவறு என்றால், மன்னித்துக்கொள் என்று சொல்லிவிட்டு கோபமாக மேடையை விட்டு கீழே இறங்கிவிட்டாராம்.