பாடசாலை அதிபரின் மோசமான செயல் : அதிரடியாக கைது செய்த பொலிஸார்!!

835

பாடசாலையொன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 49 வயது பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கதிர்காமம் பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை (22) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08 மற்றும் 09 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான அதிபர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு மாணவனையும் ,2023 ஆம் ஆண்டில் மற்றைய மாணவனையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும் விளையாட்டு செயற்பாடுகளுக்காக பாடசாலைக்கு சென்றிருந்த போது உணவு உண்பதற்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அறையொன்றிற்குள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக இந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.