வவுனியா கல்வாரி திருத்தலம் மீது விசமிகள் தாக்குதல் : சிலைகள் உடைப்பு!!

441

வவுனியாவில் கிறிஸ்தவர்களின் புனித தலமாக கருதப்படும் கல்வாரி தலத்தின் மீது இன்று அதிகாலை (24.07) இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா கோமரசன்குளத்தில் உள்ள கல்வாரி திருத்தலத்தின் மீதே இத் தாக்குதல் விசமிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக அங்கிருந்த சிலைகள் சேதமடைந்துள்ளது எனவும் கோமரசன்குளம் கிறிஸ்தவ ஆலயத்தின் தலைவர் என்.அருளானந்தம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று அதிகாலை கல்வாரி தலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மின்குமிழ்களை அணைப்பதற்காக வருகை தந்தபோது பொது மக்கள் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதைக கண்டுள்ளனர்.

இதனையடுத்து பங்குத்தந்தையிடம் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கல்வாரி தலத்தினை பார்வையிட்டபோது 15 தொகுதி சிலைகளில் 8 சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் சில சிலைகள் பாரியளவில் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவில் யூதர்களாக சித்தரிக்கப்பட்டிருந்த சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் மாதாவின் சிலையில் கை உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தீருந்தார். இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக பங்குத்தந்தையால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

11 12 13 14 15 16 17 18