
கொழும்பின் புறநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மத்தேகொட, கல்வலதெனிய பிரதேசத்தில் தனியாக வசித்து வந்த 65 வயதான சமன் ரொஹான் என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் சுமார் 26 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து தனது மனைவியுடன் அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளார். அவர் மீண்டும் இலங்கைக்கு வந்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே இவரின் மாதாந்த செலவுக்காக மனைவி வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பி வந்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பின்னர் பணம் கிடைத்ததாக தெரியப்படுத்தும் கணவர் இம்முறை தொலைபேசியில் அழைப்பேசியில் அழைப்பேற்படுத்தவில்லை.
இதனால் அயல்வீட்டு நபருக்கு அழைப்பேற்படுத்தி கணவர் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு மனைவி கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் கடந்த சில நாட்களாக வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைய குறித்த நபர் உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.





