நிலத்தில் ஸ்கேட்டிங் செய்து கின்னஸ் சாதனை படைத்த 8வயது சிறுவன்!!

674

Sketting

லிம்போ ஸ்கேட்டிங்கில் 8 வயது சிறுவன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த மெட்வின் தேவா என்ற சிறுவன் 180 டிகிரிக்கு காலை விரித்து தரையோடு தரையாக சுமார் 9 அங்குலம் உயரத்தில் 10 மீட்டர் தூரத்தை கடந்து லிம்போ ஸ்கேட்டிங் சாதனை படைத்துள்ளார்.

இது மட்டுமல்லாது 9 அங்குலம் உயரத்தில் 25 மீட்டர் தூரம் கடந்து உலகக்கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார். முந்தைய சாதனையாக கர்நாடக மாநிலம் பெல்ஹாம் பகுதியை சேர்ந்த ரோஹன் மகாகடன என்ற 12 வயது சிறுவனால் நிகழ்த்தப்பட்டது.

இந்த சாதனையானது தமிழ்நாடு புக் ஒப் ரெக்கார்ட்ஸ், இந்தியா புக் ஒப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஒப் ரெக்கார்ட்சை சேர்ந்த நடுவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது.