
தெலுங்கானா மாநில தூதராக, இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை நியமித்தது தவறு என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது.
இந்திய முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் புகழை பயன்படுத்திக்கொள்ள விரும்பிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், அவரை தங்கள் மாநிலத்தின் தூதராக நியமித்து 1 கோடி காசோலையையும் வழங்கியயுள்ளார்.
மேலும் சானியாவை தெலுங்கானாவின் மகள் என்று வர்ணித்த சந்திரசேகரராவ், டென்னிசில் மேலும் முன்னேற்றம் காண வாழ்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா தூதராக சானியாவை நியமித்ததை விமர்சித்து பாஜக தலைவர் லட்சுமணன் நிருபர்களிடம் கூறுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து ஹைதராபாத்தில் குடியேறிய சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானின் மருமகளாகிவிட்டார்.
தெலுங்கானா மாநில பிரிப்புக்காக பல மக்கள் உயிரைவிட்டபோதும், சானியா மிர்சா ஒரு நாளும் வாய்திறந்ததே கிடையாது. மேலும், கிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சிக்கு விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்குகளை பெறுவதற்காக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி சானியாவை தூதராக நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.





