இரண்டு பாடசாலை மாணவிகளுடன் ஓடிய பாடசாலை முதல்வர் பிடிபட்டார்!!

573

Abuse1

குஜராத் ராஜ்கோட்டிலுள்ள தனியார் பாடசாலை ஒன்றின் முதல்வர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதே பள்ளியில் படித்த இரு மாணவிகளுடன் ஓடியுள்ளார்.

தவால் திரிவேதி (52) என்பவர் படாதரியில் உள்ள மருத்துவர் தீப்சந்த் கார்டி இண்டர்நேஷனல் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார்.

அதே பள்ளியில் தங்கி 11ம் வகுப்பு படித்துவந்த 2 மாணவிகள் 2012ம் ஆண்டில் 16 வயதை எட்டியபோதே முதல்வருடன் ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து, பெற்றோர் பொலிசில் கொடுத்த புகாரையடுத்து குற்றப்பிரிவு பொலிசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது, அந்த பள்ளி முதல்வரின் கைப்பேசியை வைத்து, அவர்கள் பஞ்சாப்பில் இருப்பதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து, பஞ்சாப் பொலிசாருக்கு மூவரின் புகைப்படமும் மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்டு, விரைந்து செயல்பட்டதால் புத்லாடா பகுதியில் தங்கியிருந்த மூவரையும் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் தவால் திரிவேதியை கைது செய்த பொலிசார் மாணவிகள் இருவரையும் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பிவைத்துள்ளனர்.