3 வயது குழந்தையை பந்தாடிய ஆசிரியை : நெஞ்சை பதறச்செய்யும் கொடூரம்!!

610

Teaher

கொல்கத்தாவில் ஆசிரியை ஒருவர் 3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய சி.சி.டி.வி காணொளி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவின் சால்ட் லேக் ஹவுஸ் பகுதியில் ஆசிரியர் பூஜாசிங், 3 குழந்தைக்கு வீட்டிற்கு சென்று டியூசன் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், டியூசன் எடுத்த பூஜா சிங் குழந்தையை அவர்களது படுக்கை அறையில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கியது, அங்கியிருந்த சி.சி.டி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் நடைபெற்றபோது சிறுவனின் தாயார் அங்கு இல்லாததால், பெற்றோர் சி.சி.டி.வி. காணொளியை ஆய்வு செய்தபோது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர் பொலிசில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.