பிரித்தானியாவின் சாலை ஒன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் குளோசெஸ்டர்ஷைர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில், சாலைகள் மூடப்பட்டதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது.
குறித்த சிறிய ரக விமானத்தை உடனடியாக தரையிறக்க முற்பட்டதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் வேறு எந்த வாகனங்களும் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.