சுவீடனில் சமீபத்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் தடகள செம்பியன்ஷிப் போட்டியில் சச்சித்ரா ஹர்ஷனி ஜயகாந்த வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
40-44 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் அவர் அந்த திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் 5.24 மீட்டர் நீளம் தாண்டி இந்த பதக்கத்தை வென்றுள்ளார்.
சச்சித்ரா இலங்கை பொலிஸில் பணிபுரிகிறார். இந்நிலையில், மாஸ்டர்ஸ் போட்டி கடந்த ஆகஸ்ட் 13ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற்றது.
இதில் 119 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டதுடன் அந்த போட்டியில் இலங்கையில் இருந்து 14 பேர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.