மனைவி மீது அளவு கடந்த அன்பு : சமாதி மீது இதய வடிவில் நினைவுச்சின்னம் அமைத்த கணவன்!!

856

மனைவி மீதுள்ள அளவு கடந்த பாசத்தால் அவரது சமாதி மீது இதய வடிவிலான நினைவுச் சின்னத்தை கணவர் உருவாக்கியுள்ளார்.

இந்திய மாநிலமான தெலங்கானா, அனுமகொண்டா மாவட்டம் கனபர்த்தியை சேர்ந்த தம்பதியினர் சிவராஜ் மற்றும் மானசா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மனைவி மானசா மீது கணவர் சிவராஜ் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

இந்நிலையில், மனைவி மானசாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் சிவராஜ் மனதளவில் பெரிதும் பாதிப்படைந்தார்.

உடல் ரீதியாக தனது மனைவி வெகு தூரம் சென்றுவிட்டதை அறிந்த சிவராஜ் அவரது சமாதியில் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.

இதற்காக அவரது சமாதியில் தன்னை பதிக்கும் வகையில் காதல் சின்னமான 8 அடி உயர இதய வடிவிலான நினைவு சின்னம் ஒன்றை நிறுவினார். அங்கு, தனது மகள்களுடன் தினமும் சென்று வணங்கி வருகிறார்.

இதுகுறித்து சிவராஜ் கூறுகையில், “ஷாஜகான் தனது மனைவியின் நினைவாக தாஜ் மஹால் கட்டியுள்ளார். நான் மனைவியின் நினைவு என்றும் நிலைத்திருக்க காதல் நினைவுச்சின்னம் அமைத்துள்ளேன்” என்றார்.