மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

615

இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்த தங்க விலையானது தொடர்ச்சியாக மீண்டும் படிப்படியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

இன்றைய (09.04) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 747,529 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

24 கரட் தங்க கிராம் 26,370 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 210,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 24,180 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 193,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,080 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 184,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.