ஜப்பானில் வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் பழக்கமுடைய நபர்!!

302

ஜப்பானில் நாள் ஒன்றுக்கு வெறும் 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்குவதை வழக்கமாக கொண்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது, 40 வயதுடைய டெய்சுகே ஹோரி என்ற நபரே ஒருநாளில் வெறும் 30 நிமிடங்கள் உறங்கும் வழக்கத்தை கொண்டவராவார்.

குறித்த நபர், 30 நிமிடங்கள் மாத்திரம் உறங்கும் வழக்கத்தை 12 ஆண்டுகளாக தொடர்வதாகவும் அந்த 30 நிமிடங்கள் உறங்குவதற்காக சிறப்பு பயிற்சிகள் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்துக்கும் உறக்கம் என்ற ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்நிலையில், மனிதனொருவன் சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு மிக ஆரோக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

எனினும், குறித்த நபரின் உறக்கத்தின் வழக்கம் மாறாக அமைந்துள்ளமையை அறிந்த மருத்துவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.