வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர் தவறான முடிவெடுத்து மரணம்!!

4125

வவுனியா பொதுவைத்தியசாலையில் பணிபுரியும் பெண் சிற்றூழியர் ஒருவர் அவரது வீட்டில் தவறான முடிவெடுத்து சாவடைந்துள்ளார்.

குறித்த பெண் நேற்றுமுன்தினம் இரவு அவரது வீட்டில் இருந்துள்ளார். நேற்று அதிகாலை அவர் அறை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை உறவினர்கள் அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தினை மீட்டனர்.



லோயினி வயது 39 என்ற இரண்டுபிள்ளைகளின் தாயாரே சாவடைந்துள்ளார். அவரது கணவர் அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் நிலையில் ஒருசில நாட்களுக்கு முன்பாகவே நாடுதிரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.