வவுனியா கள்ளிக்குளம் பிரதேசத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க பொது குழாய்க் கிணறுகள்!!

633

கடும் வறட்சி காரணமாக வவுனியா கள்ளிக்குளம் பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இதனைப் போக்க RWF நிறுவனத்தின் வேலைத்திட்டத்துடன் திரு.பத்மநாதன் அவர்களின் உதவியுடன் பொது குழாய்க் கிணறு அமைக்கும் பணியை நேற்று முன்தினம் (23.07) கிராமசேவகரான திரு.அமலதாஸ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

கடும் வறட்சி காரணமாக வவுனியாவின் பல பகுதிகளிலும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவருவதுடன், மக்கள் அன்றாடம் தமக்குத் தேவையான தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் கடும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

-மதுஜன்-

1 2 3 4