எரிபொருளையும் பணத்தையும் சேமித்து வைத்த ரணில் : நன்றி தெரிவித்த அனுர அரசாங்கம்!!

1453

இந்த வருடத்தின் எதிர்வரும் காலப்பகுதிக்கு தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக , நாட்டின் ஜனாதிபதி அனுர தலமையிலான புதிய அரசாங்கத்தின் தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வரவிருக்கும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு

இந்நிலையில் வரவிருக்கும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை என தெரிவித்த சத்துரங்க அபேசிங்க , அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சத்துரங்க அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.