வவுனியா விபத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பில் வெளியான தகவல்!!

6048

வவுனியாவில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பாெலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் பூவரசங்குளம் குருக்கல்புதுக்குளம் பகுதியில் இன்றையதினம் (27.09.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குருக்கல்புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மாேதி விபத்துக்குள்ளானது.

இதன்பாேது விபத்துக்குள்ளான மாேட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்ததுடன், பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயதுடைய குருக்கல்புதுக்குளம் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.