இலங்கை முதியோர் இல்ல தரப்படுத்தலில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்ற வவுனியா அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையில் இயங்கிவரும் எல்லப்பர்மருதங்குளத்தில் அமைந்துள்ள #சிவன் #முதியோர் #இல்லமானது இலங்கை முழுவதிலும் உள்ள 426 முதியோர் இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற தேசிய தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தைப் பெற்றது .
சிவன் முதியோர் இல்லத்திற்கான விருது வழங்கல் நிகழ்வு 01.10.2024 அன்று சுகுறுபாய பத்ரமுல்லையில் நடைபெற்றது.மேற்படி நிகழ்வில் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதம மந்திரி ஹரிணி அமர சூரிய கலந்து கொண்டு சிவன் முதியோர் இல்ல நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது..








