மருத்துவமனையில் ஊசியால் 26 வயது இளம் பெண் உயிரிழப்பு : நடந்தது என்ன?

1350

இரைப்பை அழற்சி (Gastric) நோயினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான இளம் பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஊசி மூலம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

கடந்த வாரம் முதலாம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருபத்தி ஆறு வயதுடைய பெண்ணுக்கு பல ஊசிகள் போடப்பட்டதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் , அந்த ஊசி போட்டதன் காரணமாகவே அவரது மகள் உயிரிழந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகவும் அவரது பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தரம் குறைந்த மருந்துகள் தொடர்பில் காலங்காலமாக சந்தேகங்கள் எழுந்துள்ள போதிலும், சுகாதார அமைச்சும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ப துடன், நடவடிக்கை எடுக்காமல் ஆட்களை மட்டும் இடமாற்றம் செய்வதன் மூலம் இந்த மருந்துகளின் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார அமைச்சின் முறையை மாற்ற வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் கூறுகிறார்.