டெல்லியில் சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட தகராறில் நடைபாதையில் தூங்கி கொண்டிருந்த ராம்பால் என்ற நபரை கட்டையால் ஒருவர் கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய்யுள்ளது.
காணொளியில், இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வரும் நபர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் போர்வையை விலக்கி கட்டையால் தாக்க தொடங்குகிறார்.
பின்னர் தனது நண்பர்களுடன் பைக்கில் அங்கிருந்து தப்பித்து செல்கிறார். சிசிடிவியை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கிய பொலிஸார், ஆர்யன் என்பவரை கைது செய்தனர்.
ஆர்யன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்காரனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகிலுள்ள திறந்தவெளியில் ஆர்யன் சிறுநீர் கழிக்க முயற்சித்த போது, அருகில் இருந்த கடையில் வேலை பார்த்து வந்த ராம்பால் அதை தடுத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு பழி வாங்குவதற்காக ஆர்யன் தனது நண்பர்களுடன் திரும்பி வந்து ராம்பாலை தாக்கியமை விசாரணையில் தெரிய வந்தது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890