பேருந்தில் பயணித்த பாம்பால் பதறிப்போன பயணிகள்!!

753

குருநாகலில் இருந்து நேற்று காலை (7) மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்ற , சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

பஸ்ஸில் ஏராளமான பயணிகள் பயணம் செய்த நிலையில் , இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.

பயணிகள் போட்ட சத்தத்தில் பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது. பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்சை நிறுத்தியதை அடுத்து பயணிகள் அலறியடித்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கி சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும், பாம்பின் பயத்தால் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்து அதே பஸ்ஸில் பயணம் செய்யவில்லை எனவும் கூறப்படுகின்றது.