முன்னாள் அமைச்சர் டபிள்யூ.பி.ஏகநாயக்க காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும் போது அவருக்கு 76 வயதாகும்.
நேற்று பிற்பகல் அவர் தனது வீட்டின் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட முன்னாள் பிரதம அமைப்பாளரும் அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்துள்ளார்.
சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழக்கும் போது அவர் மட்டுமே வீட்டில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.