மரண வீட்டிற்கு சென்று வீடு திரும்பிய இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக மரணம்!!

1825

விபத்துக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றிய 32 வயதான துமிது திலாஞ்சன என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அண்மையில் வரக்காபொல பிரதேசத்தில் தனது மனைவியுடன் உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, பள்ளம் ஒன்றில் மோட்டார் சைக்கிளுடன் வீழ்ந்து படுகாயம் அடைந்திருந்தார்.

படுகாயமடைந்த அவர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிசிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்துள்ளார்.

வெலிவேரிய பிரதேச மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்த துமிது, பல்வேறு சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரின் மரணம் அந்தப் பகுதி மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெலிவேரிய முழுவதும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களால் பல்வேறு இரங்கல் பாதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.