வவுனியா வேப்பங்குளத்தில் நடந்த விபத்தில் மூவர் படுகாயம் : ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்!!

578

Accident

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் இன்று (26.07) 7.15 மணியளவில் நடந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கைப் பகுதியில் இளைஞர்கள் மூவர் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக பயணித்துள்ளனர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளிற்கு குறுக்கே சைக்கிள் ஒன்று வந்ததன் காரணமாக சடுதியாக பிரேக் பிடித்தபோது மூவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

இதில் மூவரும் கடும் காயங்களுக்கு உள்ளாகியதுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

-பிரசாத்-