வவுனியா தேசியக் கல்வியல் கல்லூரியில் அமைதிவழி கல்வி திட்டசான்றிதழ் வழங்கும் நிகழ்வு மற்றும் பிரேம் ராவத் எழுதிய உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அறிமுக நிகழ்வும் நேற்று முன்தினம் (19.10.2024) வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரட்ணம் கமலகுமார் தலைமையில் நடைபெற்றது.
அமைதிவழி கல்வித்திட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக, தொழிலதிபர் ஞா.ராஜேந்திரன் கலந்துகொன்டிருந்தார்.
கல்வியல் கல்லூரியில் ஆசிரியர்களாக கல்வி பயின்றுவரும் மாணவர்களுக்கு அமைதிவழி கல்வித்திட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு 461 ஆசிரிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
ஆசிரிய மாணவர்களால் பாடல், கவிதை, அனுபவபகிர்வு, நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் வரவேற்பு நடனம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
அமைதி, மதிப்பை உணர்தல், உள்ளே இருக்கும் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளல், தன்மானம், தேர்ந்தெடுத்தல், நம்பிக்கை, திருப்தி போன்ற ஆற்றல் மிகு பாடத்திட்டங்கள் ஆசிரிய மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு கற்கைநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு அதிதிகளால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அமைதி கல்வித்திட்டத்தின் ஸ்தாபகரான, பிரேம் ராவத் எழுதிய உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அறிமுக உரையை சிரேஸ்ட சட்டத்தரணி திருமதி நளினி கணேசயோகம் அவர்களும் உள்ளத்தின் குரல் புத்தகத்தின் அனுபவ உரையை வவுனியா தேசிய கல்வியல் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி ஜெ.பத்மாவதியும் வழங்கியிருந்தனர். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உப பீடாதிபதிகளான கெ.கரிகரசக்தி, கெ.யோகராசா மற்றும் விரிவுரையாளர்களான துணைவன் லிங்கேஸ்வரி, பத்மாவதி ஜெயச்சந்திரன், ராஜேந்திரன் மாலதி, அமைதி கல்வித்திட்ட வழிப்படுத்துனர்களான குகானந்தராஜா கீர்த்திகா, விமலநாத சர்மா மற்றும் கல்லூரியின் 780 ஆசிரிய மாணவர்களுடன் பலரும் கலந்துகொண்டிருந்தனர்