ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் கருகி பலி : பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!!

446

சிலாபம், சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை தொடர்பில் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் கொலை மற்றும் தற்கொலை என தெரியவந்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

ஹலவத்த பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி இளங்கரத்ன பண்டாவினால் இன்று பிரேதப்பரிசோதனையில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த பிரேதப் பரிசோதனையில் இரண்டு பெண்களும் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் தீயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.



நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் – சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்திருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இது கொலையா அல்லது தற்கொலையா என ஹலவத்தை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, ​​உயிரிழந்தவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இது இரட்டை கொலை மற்றும் தற்கொலை என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.