தனியார் வகுப்புக்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு!!

1421

தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச்சென்ற 17 வயதுடைய இரண்டு மாணவிகளில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹியங்கனை, லொக்கலோ ஓயாவில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி மாணவியுடன் சென்ற மற்றைய மாணவி தற்போது ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு மாணவிகளும் ஒரே பாடசாலையில் படிக்கும் நண்பிகள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை நகரில் உள்ள தனியார் வகுப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே வீட்டிலிருந்து சென்ற மேற்படி இரண்டு மாணவிகளும் வீடு திரும்பாததால் அவர்களின் பெற்றோர்கள் பதுளை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.