பால் ஊற்றியவுடன் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி : அடுத்து நடந்த ஆச்சர்யம்!!

374

வயது முதிர்வால் இறந்துவிட்டதாக நினைத்த 105 வயது மூதாட்டி ஒருவர் எழுந்து நடந்து வேலை செய்த நிகழ்வு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தேர்தல் விளம்பர தொடர்புகளுக்கு 0719567890

தமிழக மாவட்டமான தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அருகே திருவோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்பாதி ஆண்டாள் கொள்ளை கிராமத்தில் 105 வயதில் மாரியாயி என்கிற மூதாட்டி வசித்து வருகிறார்.

இவருக்கு, 70 வயதில் சுப்பம்மாள், 68 வயதில் செல்லம்மாள் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.



சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டதால் மூத்த மகள் சுப்பம்மாள் வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு 6 பேர பிள்ளைகள், 14 கொள்ளு பேர பிள்ளைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், மூதாட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர், படுத்த படுக்கையாக இருந்ததால் இறந்து விடுவார் என்று குடும்பத்தினர் நினைத்தனர்.

இதையடுத்து மகள் மற்றும் உறவினர்கள் அவருக்கு பால் ஊற்றினர். பின்னர், மாரியாயி எழுந்திருக்கவில்லை. இதனால் மாரியாயி இறந்ததாக நினைத்து உறவினர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினர்.

ஆனால், மாரியாயி கண்முழித்து எழுந்து மீண்டும் தன்னுடைய வழக்கமான பணியை செய்ய ஆரம்பித்தார். அப்போது, வெற்றிலை, பாக்கை சிறிய உரலில் போட்டு இடித்து வாயில் போட்டு மெல்ல தொடங்கினார்.

இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் இன்பர் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே, மாரியாயி இறந்துவிட்டதாக நினைத்து 3 பேர் மாலை கொண்டு வந்துள்ளனர்.