இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து!!

917

அவிசாவளை – இரத்தினபுரி வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அவிசாவளை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திவுரும்பிட்டிய பகுதியில் இன்று (22.10.2024) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரு பேருந்துகளின் சாரதிகள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக அவிசாவளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விபத்துக்குள்ளானவர்கள் தற்போது சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.