வ/குளவிசுட்டான் அ.த.க. பாடசாலையின் க.பொ.த.சா.தரத்தில் சித்திபெற்ற மாணவர் கௌரவிப்பு

1493

வ/குளவிசுட்டான் அ.த.க. பாடசாலையின் 2023 (2024) ஆம் ஆண்டிற்கான க.பொ.த  சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு  21.10.2024(திங்கட்கிழமை ) நேற்று முன்தினம்  பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பளையில் வைரவர் ஆலய சமூகம்  மற்றும் கல்விக்கரங்கள்  என்பவற்றின்  நெறிப்படுத்தலில்   இடம்பெற்ற இந்நிகழ்வின் போது  பாடசாலையின் வரலாற்றில்  முதன்முறையாக  8A  பெறுபேறு பெற்ற மாணவர்கள்  மற்றும்  திறமைசித்திகள் பெற்று  சாதனை  படைத்த மாணவர்களை பளையில் வைரவர் ஆலய முன்றலில் இருந்து  அதிதிகள் சகிதம் மாலை அணிவித்து மங்கள வாத்தியங்களுடன்  வரவேற்கப்பட்டு பாடசாலை  நுழை வாயிலிருந்து பாடசாலையின்  பாண்ட் வாத்திய இசையுடன் மாணவர்கள் அழைத்து  விழா மண்டபத்துக்கு வரப்பட்டனர்.

தொடர்ந்து பாடசாலை அதிபர் .திரு.க.பாஸ்கரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.து. லெனின் அறிவழகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக லண்டனில் வசிக்கும் பிரபல சட்ட ஆலோசகரும் எமது வ/குளவிசுட்டான் அ.த.க பாடசாலையின் பழைய  மாணவருமான  திரு.ந.இராசையா அவர்களும் கலந்து கொண்டனர். விழாவில் மாணவர்களுக்கு  பதக்கங்கள், நினைவுச் சின்னங்களும் மற்றும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

மேற்படி மாணவர்களுக்கான  கற்றல் நடவடிக்கைகள் மற்றும்  மேலதிக  வகுப்புக்கள்  என்பன  குளவிசுட்டானை   பிறப்பிடமாக கொண்ட  புலம்பெயர்  உறவுகளின்  மற்றும் பழைய மாணவர்களின்  நிதி அனுசரணையில்  கல்விக்கரங்கள்  என்னும் அமைப்பினரின்  நெறிப்படுத்தலுடன்  மேற்கொள்ளப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.