நாட்டில் உள்ள சுற்றுலா வலயங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் விசேட பாதுகாப்புத் திட்டத்தை தொடர்ந்தும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இந்த முன்முயற்சியானது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிஸ் அதிகாரிகள் மட்டுமன்றி பொலிஸ் விசேட அதிரடிப்படை, இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை ஆகியவற்றின் உறுப்பினர்களையும் ஈடுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி
அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ மற்றும் திக்வெல்ல உள்ளிட்ட பிரபல சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.