கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு!!

233
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

கனடாவின் ரொறன்ரோவில் வியாழக்கிழமை நடந்த துயரமான விபத்தில் குஜராத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த டெஸ்லா கார் பாதுகாப்பு கம்பத்தில் மோதிய பிறகு தீப்பிடித்து எரிந்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

இந்த விபத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தின் கோத்ராவை சேர்ந்த சகோதரர்கள் கேதாபா கோஹில் (29) மற்றும் நீல்ராஜ் (25), ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்ராஜ்சிங் சிசோடியா (30) ஆகியோர் உயிரிழந்தனர்.

இன்னொரு ஆண் அடையாளம் காணப்படவில்லை. 25 வயது பெண் ஒருவர் இந்த விபத்தில் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்.

விபத்தின் போது அருகில் இருந்த லாரி ஓட்டுனர்கள் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றதாக CTV நியூஸ் செய்தி தெரிவித்தது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

தீவிரமாக காயமுற்ற அந்த பெண் சாலையோரத்தில் உட்கார்ந்து பேசக்கூடிய நிலையில் இருந்தார், ஆனால் விபரங்களை பகிரவில்லை.

சகோதரர்களின் உறவினர் தெரிவித்ததாவது, கெதாபா ஐந்தாண்டுகளாக ரொறன்ரோவில் வசித்து வந்தார், நீல்ராஜ் இந்த ஆண்டு ஜனவரியில் அவரது உடன்பிறப்புகளுடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு சென்றார். அவர்கள் பிறந்தநாள் விழாவுக்குப் பின் வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து நடந்தது.

கனடா அதிகாரிகள் தீக்காயமுற்ற உடல்களுக்கு டிஎன்ஏ சோதனை செய்ய குடும்பத்தினரின் அனுமதி எதிர்பார்த்துள்ளனர் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

 

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890