அனுராதபுரத்தில் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளாத 7 பெற்றோருக்கு சட்டபூர்வமாக திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று முன்தினம் கல்நேவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த பெற்றோர்கள் சட்டரீதியாக திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினால் 16 பிள்ளைகள் பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறான சட்ட நெருக்கடியை தீர்க்கும் வகையில் இந்த திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் 7 குடும்பங்களும் சட்டப்படி திருமணம் செய்து வைப்பதுடன், அவர்களின் பிள்ளைகளுக்கு பிறப்புப் பதிவின் கீழ் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
கிராமத்தில் உள்ள தகவல்களை பார்க்கும் போது, 16க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் உள்ளனர்.
பிள்ளைகளின் பெற்றோர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பிள்ளைகளுக்கு சட்டப்பூர்வ பிறப்புச் சான்றிதழ் வழங்க வேண்டியதன் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 7 குடும்பங்கள் சட்டப்பூர்வமாக திருமணத்தில் சேர்க்கப்பட்டதாக கல்நேவ பிரதேச செயலாளர் கே.ஆர். பிரியதர்சன தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் எங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாது. எனவே பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் தலையிட்டு 7 குடும்பங்களுக்கு இந்த இடத்தில் திருமணம் செய்து வைத்தனர்.
நாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாததால் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருந்தது. நாங்கள் அடையாளம் தெரியாத மனிதர்களாக இருந்தோம்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து எங்களுக்கு மதிப்பு கொடுத்தனர் என திருமணம் செய்துக் கொண்ட தம்பதி ஒன்று தெரிவித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890