அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாளுக்கு ஏழாம் நாள் திருவிழா நேற்று காலை பத்து மணிக்கு மூலஸ்தான பூசை கொடிதம்ப பூசையைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் குதிரை வாகனத்தில் உள்வீதி வெளி வீதி எழுந்தருளி செய்தாள்.
மீண்டும் மாலை நான்கரை மணியளவில் வேட்டை திருவிழா இடம்பெற்றது . அம்பாள் குதிரையில் வேட்டை திருவிழாவுக்காக புறப்பட்ட நிகழ்வு மாலை இடம்பெற்றது.
பின்னர் வழமைபோல் இரவு ஆறரை மணிக்கு வசந்த மண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் கைலாச வாகனத்தில் எழுந்தருளிய திருக்காட்சி இடம்பெற்றது.
இன்று முத்துச் சப்பர நிகழ்வை முன்னிட்டு மாபெரும் தவில் நாதஸ்வர கச்சேரியும் இடம்பெறவுள்ளது.
திருவிழா தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற்ருடன் இணைந்திருங்கள்.
-கஜேந்திரன்-






