யாழில் கணவன் மனைவி கொலை : அதிர்ச்சியில் பிரதேசவாசிகள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

1093
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

மருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடுபவரும் அவரது மனைவியுமே கொங்கிறீட் கற்களால் தலையில் நசுக்கிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவரும் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் மாணிக்கம் சுப்பிரமணியம் என்ற 53 வயதுடைய கணவனும், மேரி என்ற 54 வயதுடைய மனைவியுமே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890

கொலை செய்யப்பட்ட கணவன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890