டோனிக்கு ஐ.சி.சி எச்சரிக்கை!!

242

Dhoni

ஜேம்ஸ் அண்டர்சன் – ஜடேஜாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த மோதலின் போது தன்னை மிரட்டும் வகையில் ஜடேஜா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக அண்டர்சன் முறைப்பாடு செய்திருந்தார். இதற்கமைய ஜடேஜாவுக்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போட்டி நடுவர் டேவிட் பூன் அபராதமாக விதித்தார்.

இந்த தீர்ப்பால் கொதித்து போன இந்திய அணித்தலைவர் டோனி, எந்த தவறும் செய்யாத ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது வேதனைக்குரியது. எங்கள் தரப்பு நியாயங்களை புறக்கணித்து விட்டனர் என்று பேட்டியின் போது பகிரங்கமாக குற்றசாட்டினார்.

இங்கிலாந்து அணித்தலைவர் அலஸ்டயர் குக்கும் இந்த விவகாரத்தில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் டோனியின் பேட்டிக்கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினையில் டோனியும், குக்கும் வெளிப்படையாக தெரிவித்த சில கருத்துகள் ஐ.சி.சி. ஒழுங்கு நடவடிக்கைகளை குறைத்து மதிப்பிடுவதாக உள்ளன. கவனமுடன், இரு தரப்பு ஆதாரங்களையும் பரிசீலித்து டேவிட் பூன் எடுத்த முடிவு எங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

எனவே இந்த தீர்ப்பை சம்பந்தப்பட்ட அனைவரும் மதிக்க வேண்டும். இது போன்ற சட்ட ரீதிரியான பிரச்சினையில் கருத்துகளை வெளியிடும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.