அமெரிக்காவில் கடலுக்குள் தரையிறங்கிய விமானம்!!

614

FLight

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் உள்ள வெனிஸ் கடற்கரையில் அவசரமாக சிறிய விமானமொன்று தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது விமானத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த கடற்பகுதியில் பலர் சூரிய குளியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதன்போது கடற்பகுதியின் மீது வட்டமடித்து பறந்துக் கொண்டிருந்த ஒரு சிறிய ரக தனியார் விமானம் அவசரமாக தரையிறங்கியது.

அப்போது மணலில் படுத்திருந்த ஒருவர் மீது மோதியதில் காயமடைந்த அந்த நபர், ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.