நடிகையை நள்ளிரவில் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பொலிஸாரால் பரபரப்பு!!

570

Actress

கேரளாவில் நள்ளிரவில் நண்பருடன் பைக்கில் சென்ற நடிகையை பொலிசார் காவல்நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஹிமாசங்கர் என்ற நடிகை, பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 25ம் திகதி இரவு கொல்லத்தை சேர்ந்த இவரது நண்பரான ஸ்ரீராம்ரமேஷ் (25) என்பவருடன் நாடக பயிற்சிக்காக பைக்கில் திருவனந்தபுரம் சென்றுள்ளார்.

அப்போது, நள்ளிரவில் சின்னக்கடை அருகே செல்லும்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொல்லம் கிழக்கு பொலிசார் அவர்களை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அவர்கள் பொலிசாரிடம் நாடக பயிற்சிக்கு செல்வதாக கூறியதில் சந்தேகம் இருப்பதாக கூறிய பொலிஸ், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் மறுநாள் காலை,துணை ஆய்வாளர் வந்த பின்னரே விடுவித்துள்ளனர். இதையடுத்து, இது குறித்து கொல்லம் காவல்துறை ஆனையர் தேபேஸ்குமார் பெஹராவிடம், ஸ்ரீராம்ரமேஷ் அளித்த புகாரையடுத்து விசாரணை நடத்த ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த விசாரணையில் கொல்லம் பொலிசார் 4 பேரும் தகுந்த ஆவணங்கள் காண்பித்த பின்னரும் அவர்களை விடுவிக்காதது தெரியவந்ததால், 4 பேரையும் கொல்லம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.