கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பேருந்து விபத்து : பலர் காயம்!!

1402

மடகல்ல – மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (08) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது பேருந்தில் 15 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.