இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று நிலையான நிலையில் உள்ளது.
இன்றைய (08) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 791,798 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 கரட் தங்க கிராம் 27,930 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 24 கரட் தங்கப் பவுண் 223,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்க கிராம் 25,610 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 22 கரட் தங்கப் பவுண் 204,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,440 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் 195,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கொழும்பு, செட்டியார் தெரு தங்க நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுண் 215,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 198,500 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,694.68 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது. நேற்றைய தினம் அதன் விலை 2,655.31 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.