நயன்தாராவின் பேச்சைக்கேட்டு ஓட்டம் பிடித்த தயாரிப்பாளர்கள்!!

423

Nayanthara

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. ஹீரோக்கள் 2 வருடம் நடிக்கவில்லை என்றாலே யாரும் கண்டுக்கொள்ளாத இந்த சினிமாத்துறையில், சில வருடங்கள் நடிப்பிற்கு முழுக்கு போட்டு விட்டு, மீண்டும் நடிக்க வந்து விட்ட இடத்தை பிடித்தவர் நயன்.

அதேபோல் இவர் நடிப்பில் வெளியான ராஜா ராணி, ஆரம்பம் படம் ஹிட் ஆனாதால் தன் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டாராம். ஆனால் சமீபத்தில் இவர் நடித்த இது கதிர்வேலன் காதல் திரைப்படம் தோல்வியடைந்ததால், எப்படியும் சம்பளத்தை குறைத்திருப்பார் என்று எண்ணிய தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்ததது.

இந்த படம் தோல்வியானால் என்ன, நான் அடுத்து நடிக்கும் தனி ஒருவன், இது நம்ம ஆளு படம் செம்ம ஹிட் ஆகும், அதனால் நான் கேட்கும் சம்பளத்தை கொடுங்கள், இல்லையெனில் அப்படியே திரும்பிவிடுங்கள் என்று முடிவாக சொல்லிவிட்டாராம்.