9 வயது மாணவன் பல முறை பாலியல் துஸ்பிரயோகம் : ஆசிரியருக்கு நேர்ந்த கதி!!

907

சம்மாந்துறையில் 9 வயதுடைய மாணவனை பல முறை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 38 வயது ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரினால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபரான 38 வயதுடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

இச் சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.

மாணவனை பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக ஆசிரியர் மீது முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.