திருகோணமலையில் 106 வயது முதியவர் வாக்களிப்பு!!

357

இலங்கையில் இன்று 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.

இந்நிலையில் திருகோணமலையில் வாழும் 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் நாடாளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று(14.11.2024) செலுத்தினார்.

யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து,தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்நது இங்கே வாழ்ந்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டார்.

அதேசமயம் இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் யோன் பிலிப் லூயிஸ் கூறினார்.