மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்த மக்கள்!!

943

இந்தியாவில் மழை வருவதற்காக வருண பகவானை வணங்கி தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் வடக்கு மாநிலமான அசாமில் உள்ள டிபுராகர் கிராமத்தை சேர்ந்த மக்கள் மழை வராமல் விவசாயத்தை பெருக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு இந்த கிராமம் மழை வராமல் கவலைப்பட்டு வருவதால் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்து வருண பகவானை வேண்டியுள்ளனர். இதனால் ஆண் மற்றும் பெண் தவளைகள் வெவ்வேறு கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு தவலைகளையும் அலங்காரம் செய்து, மேலும் பெண் தவளைக்கு தங்க சங்கிலி அணிவித்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த பின் மக்கள் அனைவரும் உணவு உண்டு மகிழ்ந்துள்ளனர்.

F1 F2 F3 F4