கைவிடப்பட்ட நிலையில் சொகுசுக் கார் மீட்பு!!

409

கைவிடப்பட்ட நிலையில் சொகுசு கார் ஒன்று நேற்று வி (12) கைப்பற்றப்பட்டுள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர். அம்பாந்தோட்டை, தங்காலை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றிற்கு அருகில் குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

வீரகெட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சொகுசு கார் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சொகுசு கார் கடவத்தை, விஜயபா மாவத்தை பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.