வவுனியா மாகாறம்பைக்குளத்தில் நடந்த கொடூரம் : மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் தானும் தற்கொலை!!(படங்கள்)2ம் இணைப்பு!!

529

2ம் இணைப்பு

வவுனியா, மாகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். செ.இராசேந்திரராஜா (45) என்ற நபரே தனது மனைவியான இ.அமுதா (38) என்பவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தூக்கில் தொங்கிய அவரது சடலம் நேற்று இரவில் இருந்து அதே இடத்தில் இருந்ததுடன் பெருமளவிலான பொதுமக்கள் அப்பகுதிக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு வந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

சற்று முன் (2.00PM) மணியளவில் வவுனியா மாவட்ட நீதிபதி மற்றும் வவுனியா பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன், விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

2120 25

1ம் இணைப்பு

வவுனியா, மாகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த நபரொருவர் தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். செ.இராசேந்திரராஜா (45) என்ற நபரே தனது மனைவியான இ.அமுதா (38) என்பவரை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நேற்று இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மனைவியை வெட்டிப் படுகொலை செய்த நபர், தனது மாமி மற்றும் மாமாவையும் கோடரியால் தாக்கியுள்ளார். அதன் பின்னரே குறித்த நபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வே.இராமச்சந்திரன் (65), இவரது மனைவியான இ.கிருஸ்ணவேணி (55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்தகராரே இதற்கு காரணமென தெரிவித்த வவுனியா பொலிஸார், மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

12 1316 14 1511