வவுனியாவைச் சேர்ந்த 21 வயது யுவதியை காணவில்லை!!

835

Missing

வவுனியா – ஓமந்தை, நாவற்குளம் பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய சிவலிங்கம் சிவதர்சினி என்ற விசேட தேவையுடைய யுவதி காணாமல் போயுள்ளதாக வவுனியா பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் நான்கு மணியிலிருந்து குறித்த பெண்ணை காணவில்லையென பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் குறித்த யுவதியின் தந்தை சிவலிங்கம் தெரிவிக்கையில்,

மனநலம் பாதிக்கப்பட்ட எனது மகள் காணாமல் போன விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாரிடமும் வவுனியா பொலிசாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் வவுனியா வைத்தியசாலை உட்பட பல இடங்களிலும் தேடியும் மகள் தொடர்பாக எதுவித தகவலும் கிடைகாத நிலையில், இன்று வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவிலும் முறைப்பாடு செய்துள்ளேன் என தெரிவித்தார்.