கால்களால் வாழும் இரு வினோத மனிதர்கள் : கண்கலங்க வைக்கும் வாழ்க்கை!! (வீடியோ)

626

அமெரிக்காவில் இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் தாங்களாகவே அனைத்து வேலைகளையும் செய்து கொள்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் சிக்காகோ நகரை சேர்ந்த லிண்டா பெனான் (35) மற்றும் அவரது மகன் டிம்மி (9) ஹொல்ட் ஓரம் சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கபட்டுருந்ததால் இரு கைகள் இல்லாமல் பிறந்துள்ளனர்.

மேலும் இந்த நோய் எலும்பு வளர்ச்சியை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இதய நோய்களை உண்டாக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களின் குறையால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தங்களின் வேலைகளை தாங்காளாகவே சுயமாக செய்து வருகின்றனர்.

இவர்கள் தங்கள் கால்களை உபயோகப்படுத்தி சாப்பிடுவது, கணிப்பொறி உபயோகிப்பது மற்றும் தங்கள் அன்றாட வேலைகளை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து பெனான் கூறுகையில், என் குழந்தையும் இவ்வாறு பிறந்தது வருத்தமளித்தது, ஆனால் தற்போது எனது மகன் தானாகவே அவனது வேலைகளை செய்து கொள்வது பெருமையளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

11 12 13 14 15