பேஸ்புக் மீது 12.3 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்த பெண்!!

1278

FB

பேஸ்புக் மீது அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த மரியம் அலி என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இலினாய்ஸைச் சேர்ந்த ஆதீல் ஷா கான் என்பவருடன் பழகியுள்ளார்.

பின்னர், இவர்களின் காதலில் பிரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கான் , மரியமின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் போட்டுள்ளார். அதுவும் மரியமின் பெயரில் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ள மரியம் அவற்றை அகற்றுமாறு பலமுறை பேஸ்புக் நிறுவனத்தை கேட்டுள்ளார்.

அப்படியும் அந்த புகைப்படங்களை பேஸ்புக் அழிக்கவில்லை. இதையடுத்து அவர் புகைப்படங்களை அழிக்காத பேஸ்புக் தனக்கு 12.3 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கான் தன்னை பழிவாங்கவே போலியாக தன்னை போன்ற உருவம் கொண்ட ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக மரியம் தெரிவித்துள்ளார்.